கேளிக்கை

மலையாள படத்தில் இணையும் ஜாக்கிசான்

(UTV|இந்தியா) – மலையாளத்தில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் நாயர் ஸான் படத்தில் மோகன்லாலும் ஜாக்கிசானும் இணைந்து நடிக்க உள்ளனர்.

கேரளாவை சேர்ந்த ஏ.எம்.நாயர் என்ற ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர் ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரில் ஓட்டல் நடத்தி இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வெளிநாடுகளில் ஆதரவு திரட்டினார். இந்திய தேசிய ராணுவத்துக்கும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் உதவியாகவும் இருந்தார். இவரை நாயர் ஸான் என்று அழைத்தனர்.

இவரது வாழ்க்கையை மலையாளத்தில் சினிமா படமாக எடுக்க 2009-ல் திட்டமிட்டனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாகவும் இருந்தது. ஆனால் படம் திடீரென்று கைவிடப்பட்டது. தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதில் மோகன்லாலும், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானும் இணைந்து நடிக்கின்றனர்.

Related posts

உலகை விட்டும் பிரிந்தார் Chadwick-Boseman

சர்ச்சையில் சிக்கிய பாகுபலி 2- திரையிடல் நிறுத்தமா?

மீடூ-வை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு