அரசியல்உள்நாடு

மலையக மக்கள் முன்னணி தலவாக்கலை பிரதேசத்தில் தனித்து போட்டியிடும் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து போட்டியிடும் பட்சத்தில் தலவாக்கலை பிரதேசத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிடுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று (09) ஹட்டனில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதகிருஷ்ணன், பதுளை மாவட்டத்திலும் இம்முறை உள்ளுராட்சி சபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிட உள்ளது. அதேபோல் ஏனைய மாவட்டங்களில் ஜக்கிய மக்கள் சக்தியோடு கூட்டணியாக நாம் போட்டியிடவுள்ளோம்.

தலவாக்கலை என்பது மலையக மக்கள் முன்னணியின் கோட்டை. அங்கு நாம் தலவாக்கலை லிந்துளை நகரசபையினை கைபற்ற வேண்டும் என்ற நோக்கில் தனிச்சையாக போட்டியிடுவதோடு அனைத்து சபைகளிலும் எமது பிரதிநிதிகள் அங்கம் வகிக்க வேண்டும்.

தேர்தலில் 25 சதவீதம் பெண்கள் போட்டியிடுவதற்கு சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டின் இன்று பெண்களுக்கு கல்வி முதல் அவர்களின் தொழில் மற்றும் உழைப்பு வரை முதலிடத்தை வழங்கவேண்டும். வரலாற்றில் இம்முறை மாத்திரம்தான் அதிகளவிலான பெண்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்கள். இன்று புதுகடை நீதவான் உள்ளே தூப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள தூப்பாக்கியினை வழங்கியதும் ஒரு பெண். அந்த பெண்ணை இதுவரையிலும் கைது செய்ய முடியாதொரு நிலையே இந்த அரசாங்கத்திற்கு காணப்படுகிறது. அதேபோல் முன்னாள் பொலிஸ்மா அதிபரையும் இதுவரை கைது செய்ய முடியவில்லை.

பெண்களுக்கு இன்னமும் அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது. பெண்கள் மதிக்கபட வேண்டும் என்பது வீட்டில் இருந்து அதனை ஆரம்பிக்கப்பட வேண்டும். பருவசீட்டு எடுத்து சென்ற தமிழ் மாணவர்களை பேருந்தில் இருந்து வெளியேற்றிய சம்பவம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பாராளுமன்றத்தில் மாணவர்களிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார். அந்த சம்பவத்தை கணோளியாக பதிவிட்ட மாணவனை நான் வாழ்த்துகிறேன்.

நாட்டின் முதல் பிரதம மந்திரியாக ஒரு பெண் ஒருவரே இருந்தார். அதேபோல் தற்போதய புதிய அரசாங்கத்திலும் பிரதமராக ஹரிணி அமரசூரிய செயற்பட்டு கொண்டிக்கிறார். எனவும் குறிப்பிட்டார்.

-சதீஸ்குமார்

Related posts

அரிசி பொதி செய்யப்படும் பையின் விலையும் உயர்வு

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படும் தபால் சேவை!

ஐக்கிய நாடுகளின் சபையின் வதிவிடப் பிரதிநிதி சிவில் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலையில் சந்திப்பு!