உள்நாடுசூடான செய்திகள் 1

மலையக மக்களுக்காக தனி விவாதம் நடாத்த தயாராகும் இலங்கை பாராளுமன்றம்!

(UTV | கொழும்பு) –

மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான வீ.இராதாகிருஷ்ணன் சபையில் கோரிக்கை விடுத்த நிலையில் அந்த விவாதத்திற்கு தாம் இணங்குவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (19) பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இராதாகிருஷ்ணன் எம்.பி இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக  அவர் கூறுகையில்,

தோட்டப்புறங்களில் பல பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பில் சபையில் ஒருநாள் விவாதமொன்றை நடத்த நாளொன்றை வழங்குங்கள். தோட்ட நிர்வாக பிரச்சினைகள் உள்ளன. அங்குள்ளவர்கள் சிறிய அறையொன்றை அமைக்கும் போது அவர்களை அங்கிருந்து வெளியேற்றுகின்றனர். இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்களும் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் அடுத்த வாரத்தில் இது தொடர்பில் விவாதத்திற்கு நாளொன்றை வழங்குங்கள் என்றார்.

இதன்போது, சபையில் இருந்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்  ரமேஷ் பத்திரன பதிலளிக்கையில்,

நீங்கள் கூறும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் தலையீடுகளை செய்கின்றோம். அதேபோன்று நீங்கள் கோரும் விவாதத்திற்கும் நாங்கள் இணங்குகின்றோம் என்றார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது

இன்றும் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு

சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிப்பு ?