சூடான செய்திகள் 1

மலையக தொடரூந்து சேவைகள் வழமைக்கு

(UTV|COLOMBO) நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு தொடரூந்து எண்ணெய்க் கொள்கலனொன்று  நேற்று மாலை 5.45 மணியளவில் தடம் புரண்டதால் மலையக தொடரூந்து  சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்று இரவு 9.45 மணியளவில் தொடரூந்து பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையக தொடரூந்து சேவை வழமைக்கு மாறியுள்ளதாக நாவலப்பிட்டி தொடரூந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொட்டகலை தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் தொடரூந்தின் சரக்கு பெட்டி பகுதியே தடம் புரண்டிருந்தது.

26630 லீற்றர் எண்ணெய்க் கொள்கலன் ஒன்றை கொட்டகலை எரிபொருள் டிபோவில் நிறுத்துவதற்கு முற்பட்ட சந்தரப்பத்திலேயே இவ்வாறு தடம் புரண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

 

 

 

Related posts

இன்றைய வானிலை…

கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களும் விடுவிப்பு

ரிசாத் பதியுதீனின் பாதுகாப்புக்காக இறக்காமம் சபையில் பிரேரணை நிறைவேற்றம்