உள்நாடு

மலேசியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை இளைஞன்

தனது வேலைக்காக மலேசியா சென்ற மஸ்கெலியா மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இளைஞரின் உடலானது நேற்றிரவு 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.

கொலாம்பூரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த மாதம் 24 ஆம் திகதி கொதிகலன் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.அப்போது படுகாயமடைந்து கொலாலம்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரிடம் இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து இளைஞனின் சடலம் இன்று இரவு 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.

Related posts

உயர் கல்விமுறையில் மறுசீரமைப்பு அவசியம்

பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

இண நல்லிணக்க செயற்பாட்டை மேம்படுத்தும் களப் பயணம்

editor