சூடான செய்திகள் 1விளையாட்டு

மலிங்கவுக்கு வெற்றியை பரிசாக கொடுத்தது இலங்கை அணி

(UTVNEWS | COLOMBO) – – பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

லசித் மலிங்க தனது 15 வருடகால சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றுச் சென்றார்.

லசித் மலிங்க இதுவரை 329 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 536 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.அதில் 30 டெஸ்ட் போட்டிகளில் – 101 விக்கெட்டுகளையும், 226 ஒருநாள் போட்டிகளில் – 338 விக்கெட்யும், 13 இருபதுக்கு -20 போட்டிகளில் – 97 விக்கெட்களை கைபற்றியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில்,நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் பெரேரா 111 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்தியூஸ் 48 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் சைபுல் இஸ்லாம் மற்றும் முஸ்தபிஸுர் ரஹ்மான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

அதன் அடிப்படையில் இலங்கை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

Related posts

சகோதரரது அநீதியான கைது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

வாத்துவை விருந்துபசாரத்தில் தொடரும் மர்மங்கள்

IPL சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?