உலகம்

மலாலாவுக்கு தீவிரவாத மிரட்டல்

(UTV |  பாகிஸ்தான்) – தீவிரவாதிகளால் சுடப்பட்டு பின்னர் ஐ.நாவின் பெண்கள் கல்வி தூதுவராக பொறுப்பு வகிக்கும் மலாலாவுக்கு தீவிரவாத மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் கல்வி குறித்து தொடர்ந்து பேசி வந்த மலாலா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் மீண்டு வந்த அவர் உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் மலாலாவுக்கு தீவிரவாதி இஸானுல்லா என்பவரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலாலாவுடனும், அவர் தந்தையுடனும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினை உள்ளதாக பதிவிட்டுள்ள இஸானுல்லா பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது – WHO

லண்டனில் யூதர்களுக்கு ஆதரவாக 1 இலட்சம் பேர் பேரணி!

உலக அளவில் 65 இலட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு