(UTV | கொழும்பு) – இரத்தினபுரி, ரக்வான பகுதியில் மற்றுமொரு 80 கிலோ எடை கொண்ட Sapphire Cluster எனும் நீல மாணிக்கல் பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணிக்கல் பாறை தற்போது கொழும்பில் உள்ள வியாபாரி ஒருவரிடம் உள்ளதாகவும் அதனை பரிசோதனை செய்ய தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த மாணிக்கல் பாறையை தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணிக்க கல்லின் பெறுமதியை மதிப்பீடு செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வதேச சந்தையில் ஏலத்திற்கு விடுவதாக அதிகாரிகள் குறித்த நபருக்கு வாக்களித்துள்ளனர்.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)