உள்நாடு

மற்றுமொரு ஹெரோய் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – மற்றுமொரு ஹெரோய் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அகுனுகொலபலஸ்ஸ முலனகொட பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு சந்தேகநபரிடம் இருந்து சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான 03 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, அம்பலாந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (03) கொக்கல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள் 22 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

Related posts

இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் – விரைகிறது விசாரணைக்குழு

பேரீத்தம்பழ இறக்குமதிக்கு வரி விலக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!

பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ