உலகம்

மற்றுமொரு கொடிய நோய் குறித்து WHO எச்சரிக்கை

(UTV |  ஜெனீவா) – உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மலேரியாவுக்குப் பிறகு Visceral leishmaniasis மிகவும் பொதுவான ஒட்டுண்ணி நோயாகும்.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 25,000 முதல் 30,000 பேர் வரை இந்த நோயால் இறக்கின்றனர் என்றும் இறப்பு விகிதம் சுமார் 99.99 சதவிகிதம் என்றும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2021 ஆம் ஆண்டில் மட்டும் மொத்த நோயாளிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் 10 நாடுகளில் கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் இலங்கைக்கு மிக நெருக்கமான நாடான இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் விளக்குகின்றன.

3 மிமீ நீளமும் 2-3 மிமீ விட்டமும் கொண்ட Phlebotomine இனத்தைச் சேர்ந்த மணல் பிளேஸ்தான் Visceral leishmaniasis கேரியர்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

வறுமை, மோசமான சுகாதாரம், ஊட்டச்சத்து குறைபாடு, நகரமயமாக்கலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வனப்பகுதிகளில் மனிதர்கள் ஊடுருவல் ஆகியவை Leishmaniasis அபாயத்தை அதிகரிக்கின்றன என்று அறிக்கை மேலும் கூறியது.

Related posts

முகக்கவசம் அணியாத பிரதமருக்கு அபராதம்

இஸ்ரேல் சென்றடைந்த அமெரிக்க ஜனாதிபதி!

கொரோனா வைரஸ் – இதுவரை 2244 பேர் பலி