விளையாட்டு

மறைந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் : அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு

(UTV |  அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் நேற்று காலமானார்.

தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஷேன் வோர்னின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மோரிசன் அறிவித்துள்ளார்.

மேலும், அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களுள் அவரும் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

காற்று மாசுபாடு வீரர்களின் உத்வேகத்தை குலைக்கும்

மும்பை இந்தியன்ஸ்வுடன் போராடி வென்ற கிங்ஸ்லெவன் பஞ்சாப்!!