உள்நாடு

மருந்து விலையை அதிகரிக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) –  மருந்துகளின் விலையை மேலும் 20% அதிகரிக்குமாறு மருந்து இறக்குமதியாளர்கள் சபை, மருந்து உற்பத்தி மற்றும் வழங்கல் அரச அமைச்சுக்கு நேற்று (28) அறிவித்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 300 ஆக உயர்ந்துள்ளதால் மருந்துகளின் விலையை அதிகரிக்க வேண்டும் என மருந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். விலை உயரவில்லை என்றால் விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அறுபது மருந்துகள் தற்போது விலைக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், மருந்துகளின் விலையை 29% உயர்த்த சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, பாராசிட்டமால் மாத்திரை ரூ.1.59ல் இருந்து ரூ.3 ஆக உயர்ந்தது. எவ்வாறாயினும், தற்போதைய நிலைமை தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நாளை (30) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக மருந்து விநியோக மற்றும் உற்பத்தி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

‘இலங்கை இனவாத அரசின் சர்வாதிகாரமே ரிஷாதின் கைது’ – இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

கொரோனா : 342 பேர் அடையாளம்

நாளை நள்ளிரவுடன் பொதுத் தேர்தல் பிரசாரங்கள் நிறைவு

editor