வணிகம்

மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமை குறித்து கவலை

(UDHAYAM, COLOMBO) – கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 48 வகையான மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமை குறித்து ஒளடத வரத்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

இந்த விலைக் குறைப்பு காரணமாக தாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இந்த அமைச்சை சேர்ந்தவர்கள் பேச்சுவார்தை நடத்திவருகின்றனர்.

இதற்கமைய இலங்கை வர்த்தக சம்மேளனம் தேசிய மருந்தக ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் அசித்த டி சில்வாவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பினரான மருந்தக விற்பனையாளர் மற்றும் நுகர்வோர் பாதிப்படையாத நிலையில் இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்…

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை

உரத்திற்கான புதிய விலை