சூடான செய்திகள் 1

மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை முதல் இடம்பெற்றுவருகின்றது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனைக்கு அமைய அரச மருந்தக கூட்டுத்தாபன மற்றும் மருந்து விநியோக பிரிவின் உயர் அதிகாரிகளுக்கு இடையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

புற்று நோயாளர்களுக்கான 200 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் இருப்பதாக அரச மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது.

குறித்த மருந்துகளை இலங்கைக்கு கொண்டுவருவது மற்றும் அவற்றை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் இடம்பெறுவதாக, அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முகாமை பணிப்பாளர் கலாநிதி எச்.எம்.எம்.ரூம் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தரம் ஒன்று மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் 17ம் திகதி ஆரம்பம்

பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்தும் பொலிஸார் சேவையில்..