உள்நாடு

மருந்து கொள்வனவில் பாரிய மோசடி!

(UTV | கொழும்பு) –

மருந்து கொள்வனவில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் திருப்தியடைய முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். மருந்துக் கொள்வனவு தொடர்பான டெண்டர் நடைமுறையில் ஈடுபட்ட அதிகாரிகளே உரிய குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிகக்குறைந்த விலையில் மருந்துகளை கொள்வனவு செய்யக்கூடிய நிலை இருந்தும், அதிக விலைக்கு கொள்வனவு செய்து இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு மருந்தை 0.15 டொலருக்கு வாங்கலாம் என்றும், ஆனால் ஒரு மருந்தை 10.03 டொலருக்கு வாங்கப்படுவதாகவும், இதன் மூலம் சுமார் 10 கோடி அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது இலங்கை பணத்தில் 30 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை – நிஹால் தல்துவ

editor

காலி பாடசாலைகளை திங்களன்று மீள திறக்க தீர்மானம்

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு