உலகம்

மரணத்தில் முடிந்த கால்பந்து போட்டி

(UTV |  இந்தோனேசியா) – இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களில் இருவர் பொலீஸ் அதிகாரிகள் என கூறப்படுகிறது.

Arema FC மற்றும் Persebaya Surabaya ஆகிய இரு அணிகளுக்கிடையிலான போட்டியில் Arema அணி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து மைதானத்தில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், மோதலை அமைதிப்படுத்த பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

எவ்வாறாயினும், கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதலால் சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளானவர்கள் மயங்கி கீழே விழுந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

அதேநேரம் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

ஹோண்டுராசை தாக்கிய புயல் – 26 பேர் பலி

இதுவரை 231 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளன