அரசியல்உள்நாடு

மரச் சின்னத்தில் போட்டி – மூன்று சபைகளில் கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

காத்தான்குடி நகர சபை உள்ளிட மூன்று சபைகளில் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (19) கட்டுப்பணம் செலுத்தியது.

அதற்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை பற்று பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

அதற்கான கட்டுப்பணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் செலுத்தப்பட்டது.

Related posts

MV Xpress pearl கப்பலின் கெப்டன் CID இனால் கைது

கொழும்பில் வழுக்குக்கும் ‘டெல்டா’

தமிழ் வேட்பாளரை இரவு பகலாக தேடி வருகிறோம் – விக்னேஸ்வரன்