உள்நாடுவணிகம்

மரக்கறி விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) –   தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) கொழும்பு மாவட்டத்தில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினத்தில் நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வௌி மாவட்டங்களில் இருந்து கொழும்பு மாவட்டத்திற்கு மரக்கறிகளை கொண்டு வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

கொழும்பு மாவட்டத்தினுள் அமைந்துள்ள நாரஹேன்பிட, போகுந்தர மற்றும் மீகொட ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை மொத்த விற்பனைக்காக திறக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மத்திய நிலையங்களுக்கு வௌி மாகாணங்களில் இருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு விவசாயிகள் மற்றும் மற்றைய வர்த்தகர்களுக்கான வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த விவசாயிகளின் உற்பத்திகளை கொண்டு வர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசேடமாக மீகொட பொருளாதார மத்திய நிலையத்தை கேந்திரமாக கொண்டு தம்புள்ளை, நுவரெலியா மற்றும் தம்புத்தேகம ஆகிய விவசாயிகளின் உற்பத்திகளை கொழும்பு, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விநியோகிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். என்றார்.

Related posts

இராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கு கொரோனா

அதிக விலை கொடுத்து முட்டையை வாங்க வேண்டாம்

பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற சுந்தரலிங்கம் பிரதீப்

editor