சூடான செய்திகள் 1

UPDATE -மரக்கன்றை நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி…

(UTV|COLOMBO) பண்டிகைக்காலத்தை  முன்னிட்டு சுப நேரத்தில் இம்முறை மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு நாடாளவிய ரீதியல் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு இன்று காலை சுபநேரமான 11.17 மணி க்கு  இடம்பெற்றுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுபநேரத்தில் மரக்கன்றை நாட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைய இன்றைய தினம் சுபநேரத்தில் மரக்கன்றுகள் நாட்டப்படவுள்ளன.

இன்று காலை 11.17 இற்கு மரக்கன்று நாட்டும் விசேட நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும்.

இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இந்த நிகழ்வுக்கு மரக்கன்று ஒன்றை நாட்டி, பங்களிப்பு செய்யும்படி சுற்றாடல் துறை அமைச்சு கேட்டுள்ளது.

மாவட்ட மற்றும் வன பரிபாலன அலுவலங்கள் பெறுமதிமிக்க மூலிகை கன்றுகளையும் ஏனைய மரக்கன்றுகளை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 

 

 

 

 

Related posts

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

மாணவர்களுக்கு வவுச்சருக்கு பதிலாக சீருடைக்கான துணி

நவீன தொழிநுட்ப அறிவுடன் ஒழுக்கப் பண்பாடான சிறுவர் தலைமுறை நாட்டில் உருவாக வேண்டும் – ஜனாதிபதி