உலகம்

மயோட்டே தீவை தாக்கிய சிடோ புயல் – பலர் பலி – 200 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சுமார் 3 இலட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள் தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவு மடகஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது.

இந்நிலையில், மயோட்டே தீவை நேற்று (15) சிடோ என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய இந்தப் புயலால் பல வீடுகள் சேதமடைந்தன.

மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்தப் புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும், 200 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.

புயல் தாக்கிய மயோட்டே தீவிற்கு தேவையான நிவாரண உதவிகளை பிரான்ஸ் அரசு வேகப்படுத்தியுள்ளது. மீட்புப்பணியில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

டுவிட்டருக்கு நைஜீரிய அரசு தடை

கொரோனா வீரியம் : புதைக்க இடமின்றி காத்திருக்கும் சடலங்கள்

அமெரிக்காவில் நினைவுநாள் கொண்டாடத்தில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி