மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் வைக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்பு புத்தகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பதிவொன்றையிட்டார்.
நேற்று (30) கொழும்பு 03, காலி வீதியிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் தனது இறுதி அஞ்சலியை பிரதமர் ஹரினி செலுத்தினார்.
இந்திய முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் 2024 டிசம்பர் 26ம் திகதி முதல் 2025 ஜனவரி மாதம் 01ம் திகதி வரையான 7 தினங்களுக்கு இந்தியாவில் அரச துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதற்கு இணைவாக இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்திலும் 2024 டிசம்பர் 30 (நேற்று) முதல் 2025 ஜனவரி 01ம் திகதி வரை இரங்கல் குறிப்பு புத்தகமொன்று வைக்கப்பட்டுள்ளது.