வகைப்படுத்தப்படாத

மன்னார், பி.பி பொற்கேணி, பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

(UTV | கொழும்பு) –

மன்னார், பி.பி பொற்கேணி – அளக்கட்டு அஸ் / ஸபா பாலர் பாடசாலையின் விடுகைவிழா கடந்த (19) வெள்ளிக்கிழமை மாலை பாலர் பாடசாலை முன்றலில் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அலிகான் சரீப், முசலி பிரதேச சபை செயலாளர் நஜீம், மன்னார் வலய பாலர் பாடசாலைகளுக்கான பிரதிப்பணிப்பாளர் அஸ்லம், முசலி கோட்ட உதவிக்கல்விப் பணிப்பாளர் உவைஸ், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாஹிர், வைத்தியர் றிஸ்வான், சாஹீர், றிபாய், றமழான் மௌலவி, சிறாஜீடீன், சுகைப், கஸ்ஸாலி, இஸ்றத், முசலி பிரதேச பாலர் பாடசாலைகளுக்கான இணைப்பாளர் அமீருன் நிஸா மற்றும் பள்ளிவாசல் பரிபாலனசபைத் தலைவர் டில்சாத் உட்பட பள்ளி நிர்வாகிகளும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

   

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதான 3 விடயங்கள் கவனம் செலுத்தப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பு

ஐக்கிய தேசிய கட்சியை முழு மறுசீரமைக்கும் அறிக்கை இன்று

காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம் 100 வது நாளை எட்டியது