உள்நாடுபிராந்தியம்

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் உள்ளடங்களாக மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்களை கைது செய்த நிலையில் நேற்று முன்தினம் (23) மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்தனர்.

மன்னாரைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடற் தொழிலாளி குறித்த கொலை சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

Related posts

உரிய தீர்வின்றேல் சர்வதேச நீதிமன்றினை நாடுவோம் [VIDEO]

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சிறந்ததாகும் – சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – தயாசிறி ஜயசேகர எம்.பி

editor

அறிவித்தலின்றி பயணித்த ரயிலில் மோதுண்டு 10க்கும் மேற்பட்ட மாடுகள் பலி