உள்நாடு

மன்னாருக்கு விஜயம் செய்த மஹிந்த தேசப்பிரிய

(UTV|MANNAR) – தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று(04) காலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல் தொடர்பாகவும், குறித்த தேர்தலோடு பணியாற்றிய அதிகாரிகளை சந்திக்கும் முகமாகவும் விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், ஜனாதிபதி தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பான முழுமையான அறிக்கைகளை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அதனை முழுமைப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான விபரங்களையும் அது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக கொடுத்து சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கம்பளையில் காணாமல்போன Fathima Munawwara கொன்று புதைப்பு! CCTV VIDEO

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு

அஜர்பைஜானில் இலங்கை மாணவிகள் மூவர் பலி