உள்நாடு

மனோ தித்தவெல்ல காலமானார்

(UTV|கொழும்பு) -மக்கள் வங்கியின் முன்னாள் தலைவர் மனோ தித்தவெல்ல இன்று(03) காலை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் காலமானார்.

இவர் இலங்கையில் இடைக்கால நீதி வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஒப்படைக்கும் நல்லிணக்க பொறிமுறைகளைக் கூட்டிணைப்பதற்கான செயலகத்தின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

மனோ தித்தவெல்ல பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகராகவும், 2003 ஆகஸ்ட் மாதம் முதல் 2005 நவம்பர் மாதம் வரை ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.

Related posts

மைத்திரி – தயாசிறிக்கு அழைப்பாணை

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் போக்குவரத்து சேவை

2 பதில் அமைச்சர்களை வழங்கிவிட்டு வெளிநாடு சென்றார் ஜனாதிபதி