வகைப்படுத்தப்படாத

மனைவியை தாக்க வந்த நபர், பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பலி

(UDHAYAM, COLOMBO) – தனது மனைவியை தாக்குவதற்காக கூரிய ஆயுதம் மற்றும் அமில போத்தலையும் கொண்டு வந்த நபர், பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இரத்தினபுரி கிரியெல்ல  பஹலகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

23 வயதான குறித்த நபர் வீட்டுக்கு வந்து தனது மனைவியை தாக்க முற்பட்ட போது, மனைவி கூச்சலிட்டுள்ளார்.

இதனைக் கேட்ட உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் அந்த இடத்திற்கு வந்து அவரை தாக்கியுள்ளனர்.

பின்னர் இவரை தாக்குவதாக கிரியெல்ல காவற்துறைக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் காவற்துறை வந்து குறித்த நபரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ප්‍රේමචන්ද්‍ර මහත්මියට එරෙහි නඩුව දෙසැම්බරයට කල් යයි

வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 19ஆவது நாள் இன்று

President appoints new SLFP Organisers