வகைப்படுத்தப்படாத

மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சும் நவாசின் மரணம் அடைந்ததால், நீதிமன்ற அனுமதியுடன் அவரது கணவர் நவாஸ் ஷரிப் பரோலில் வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார்.

இவரது மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் நேற்று(11) உயிரிழந்தார். இந்நிலையில், நவாஸ் ஷரிப் தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அவரது பரோல் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு 12 மணி நேர பரோல் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ், அவரது கணவர் ஆகியோர் லாகூரை வந்தடைந்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker cozlor=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்

ජවිපෙ විශ්වාස භංගය අද විවාදයට

Andy Murray to partner Serena Williams in Wimbledon mixed doubles