கேளிக்கை

மனைவிக்காக விஜய் எடுத்த முடிவு

(UTV|COLOMBO)- லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய், மீசையை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு, சிறைச்சாலை அரங்கு அமைத்து படமாக்கப்பட்டபோது, மீசையின்றி விஜய் நடித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்க்கு நெருக்கமானவர்கள் இதுபற்றி கூறியதாவது, ‘ஆரம்பத்தில், மீசையை எடுக்க விஜய் தயங்கினார். அவரது மனைவி சங்கீதா, ‘பரவாயில்லை… நன்றாகத் தான் இருக்கும்’ எனக் கூறவே, மீசையை எடுக்க சம்மதித்தார்’ என்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு, சென்னை அடுத்த, பனையூரில் நடக்கிறது.

Related posts

`தி அயர்ன் லேடி’ படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை

மூச்சுத் திணறலில் விஜயகாந்த்

புருவ புயல் பிரியா வாரியர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு