கிசு கிசு

மனநோயாளிகளாக மாறும் இலங்கையர்கள்?

(UTV|COLOMBO)-இணைய பாவனை காரணமாக இலங்கையர்கள் அதிகளவில் மனநிலை பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகங்கள், இணையம் போன்றவை முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதும், அவற்றுக்கு மக்கள் அடிமையாதலும், அபாயகரமான மட்டத்தை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலத்திரனியல் ஊடகங்கள், இணையம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளைத் தாண்டி, சமூகத்தில் கூடுதலான தீமைகள் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதென உளவியல் நிபுணர் வைத்தியர் அபேக்ஷா ஹேவாகீகன தெரிவித்தார்

இணைய துஷ்பிரயோகமும், இணையத்திற்கு அடிமையாதலும், போதைப்பொருள் துஷ்பியோகத்திற்குச் சமமான பாதக விளைவுகளை ஏற்படுத்திக்கூடியன. எனவே, இளம் தலைமுறை மத்தியில் கல்விக்காக புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது பற்றி கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

தமது நாளாந்த செயற்பாடுகளை பாதிக்கும் வகையில் இணையத்தையோ, முகநூலையோ, திறன்பேசிகளையோ பயன்படுத்துதல் அடிமைத்தனமாகும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பேரியல் அஷ்ரப் யாருக்கு ஆதரவு?

இலங்கையர்களை தலைகுனிய வைத்த வெளிநாட்டு யுவதி!

விராட் கோலியின் மீது காதல்? தமன்னா ஓபன்டாக்