உள்நாடு

மத வழிப்பாடு, தனியார் வகுப்புகளுக்கு அரசாங்கம் அனுமதி

(UTV | கொழும்பு) – மத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 100 மாணவர்களுக்கு உட்பட்ட வகையில் மேலதிக வகுப்புக்களை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இவ்வாண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி