உள்நாடு

மத்ரஸா மாணவன் கொலை: மெளலவிக்கும், ஏனையோருக்கும் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

சாய்ந்தமருது, மதரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் மர்ம மரணம் தொடர்பான சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலையாகிய மௌலவி உள்ளிட்ட 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பின்னர் இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதனையடுத்து, குறித்த சம்பவத்தில் கடந்த தவணையின் போது 30,26, 22, 23, வயது மதிக்கத்தக்க 4 சந்தேக நபர்களை பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை நீதிவான் ஆராய்ந்தார்.

நீண்ட சமர்ப்பணத்தின் பின்னர் மதரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களையும் தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணை மற்றும் மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டு நீதிமன்றில் பாரப்படுத்தல், குறித்த வழக்கு தவணைகளில் தவறாது முன்னிலையாதல், உள்ளிட்ட பிணை நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

 

Related posts

ஜனாதிபதி அமெரிக்கா நோக்கி பயணம்

MCDONALD’S உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை- ABANS

பாத்திமா மரணம் : தாயும் பூசகர் பெண்ணும் விளக்கமறியலில்