உள்நாடு

மத்ரஸா மாணவனின் மரணம் – வெளிவந்த வாக்குமூலம்!

(UTV | கொழும்பு) –

மௌலவி அடிக்கடி தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு, அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என சிசிரிவி தொழிநுட்பவியலாளர் தெரிவித்துள்ளார். சம்பவ தினமன்று இரவு 7 மணியளவில் மௌலவி பதற்றத்துடன் சிசிரிவி தொழிநுட்பவியலாளரான எனக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து உடனடியாக மத்ரஸாவிற்கு வந்து எல்லாவற்றையும் வன்பொருளில் (HARD DISK) இருந்து அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு நான் என்னால் வரமுடியாது என மௌலவியிடம் கூறி விட்டேன். அத்துடன் வன்பொருளில் உள்ளவற்றை ஏன் அழிக்க வேண்டும் என கேட்டதற்கு அவர் ஒன்றுமே சொல்லவில்லை. பின்னர் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி அவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். இரவு 11 மணியளவில் மாணவன் இறந்த பின்னர் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. அந்த வேளை எனது சகோதரர் நாம் சிசிரிவி பரிசோதனை மேற்கொண்ட மத்ரஸாவில் மாணவன் மரணமாகியுள்ளதாக என்னிடம் குறிப்பிட்டார்.

நான் அவரிடம் அங்கு என்ன செய்தீர்கள் என சகோதரரை கேட்டேன். அப்பாடசாலையில் சிசிரிவி வன்பொருள் காணொளிகளை அழிக்குமாறு மௌலவி கேட்டதுடன் வன்பொருளை அங்கிருந்து அகற்றி செல்லுமாறு பதற்றத்துடன் கூறியுள்ளார். அத்துடன் 1000 ரூபா காசும் கொடுத்து 3 நாளைக்கு பின்னர் வன்பொருளை வந்து பொருத்தி தருமாறும் எனது சகோதரரிடம் மௌலவி கூறி இருக்கிறார்.

அத்துடன் சம்பவம் இடம்பெற்று பதற்றம் நீடித்து இருக்கின்ற நிலையில் மௌலவி அடிக்கடி தொலைபேசி அழைப்பு எடுத்து அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த கபில நாட்டில் இல்லை

சிகரெட்டின் விலையில் இன்று முதல் மாற்றம்

பேராதனை பல்கலை. மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!