உள்நாடு

மத்திய வங்கிக் கொள்ளையின் மூளையே ரணில் – டில்வின்

(UTV | கொழும்பு) – அரசாங்கமும் அதற்கு நெருக்கமான அரசியல் குழுக்களும் ஜனாதிபதியை வைத்து தற்காலிக தீர்வை காண முயற்சிப்பதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

ராஜபக்ஷர்களை அகற்றி நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தருணம் இதுவெனவும், மத்திய வங்கிக் கொள்ளையின் மூளையாக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாட்டை அழித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலதாமதத்தால் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும், ஸ்திரத்தன்மையை உருவாக்காவிட்டால் நாடு மேலும் வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப்பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர் ஒருவர் கைது

காணாமல்போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு