உள்நாடு

மத்திய மலையக பகுதிகளில் தொடரும் வரட்ச்சி

மத்திய மலையக பகுதிகளில் தொடரும் வரட்ச்சியான கால நிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 45 அடி குறைந்து தற்போது 75 அடி நீர் உள்ளது.

காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 25 அடி குறைந்து உள்ளது.

நீர் மின்சார உற்பத்திக்காக நீரை சேமித்து வைக்கும் நீர் தேக்கங்கலான மவுசாகல காசல்ரீ ஆகிய இரண்டு நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இந்த இரண்டு நீர் தேக்கங்களில் இருந்து கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, கலுகல, ஆகிய நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது.விமலசுரேந்திர மற்றும் ஏனைய நீர் மின் நிலையங்களும் இயங்கி வருகிறது.
தொடர்ந்து வரட்ச்சியான காலம் தொடரும் பட்சத்தில் மலையக பகுதிகளில் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது அத்துடன் மின் உற்பத்தி பாதிக்கும் .

தற்போது நீரில் மூழ்கிய அனைத்து வணக்கஸ் தலங்களும் மக்கள் மற்றும் உல்லாச பயணிகள் பார்வை இட முடியும்.

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்

Related posts

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து வரையறை தளர்வு

மேலும் 243 கொரோனா தொற்றாளர்கள் சிக்கினர்

INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி நவம்பர் – BMICH இல்.