உள்நாடு

மத்திய கிழக்கு, சீன மற்றும் இந்திய இராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

(UTV | கொழும்பு) – மத்திய கிழக்கு நாடுகள், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து அரச தலைவர் ராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டது.

தற்போது நிலவும் நிலைமையைத் தீர்ப்பதற்கு இலங்கைக்கு உதவுவதற்கு இந்த நாடுகளின் உதவியைக் கோரிய ஜனாதிபதி ராஜபக்ஷ, அந்த நாடுகள் வழங்கிய உதவிகளுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி

“பெண்களை காதியாக நியமிப்பதை ஏற்கப்போவதில்லை” சட்டத்தரணிகளான சரீனா மற்றும் ஷிபானா

ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு