உள்நாடு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்த வேண்டாம்

(UTV | கொழும்பு) – தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாகனங்களை அந்தப் பாதையில் செலுத்துவது சட்டவிரோத செயற்பாடாகும் என்றுஅதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.டி.எஸ் வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதையின் நிர்மாணப் பணி காரணமாக அங்கு அடிக்கடி கனரக வாகனங்கள் செல்வதினால் விபத்துக்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

நாளை முதல் விமான சேவை ஆரம்பம்

கொரோனா சந்தேகம்; யாழ். வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்