உள்நாடு

மத்தியக் கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தடை நீக்கம்

(UTV | கொழும்பு) –  மத்திய கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வருகை தரும் விமானப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது.

“ கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமன், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கே நிபந்தனைகளுடனான அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.

இந்த அனுமதி இன்று (30) முதல் வழங்கப்பட்டுள்ளது என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் கூறினார்.

இலங்கை தூதரகத்தினால் அனுமதி வழங்கப்பட்ட நிலையங்களில் பி.சி.​ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறில்லையெனின் குறித்த நாடுகளின் விமான நிறுவனங்கள் அனுமதி வழங்கிய நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் எடுக்கப்படல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

IMF ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைக்காக அலி சப்ரி பயணம்

பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

நாட்டின் பொது முடக்கம் நீடிப்பு