வகைப்படுத்தப்படாத

மத்தளையில் தரையிறக்கப்பட்ட நெதர்லாந்து விமானம்

(UTV|கொழும்பு)- நெதர்லாந்தில் இருந்து 235 கப்பல் பணியாளர்களை உள்ளடக்கிய விசேட விமானம் இன்று முற்பகல் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் பணியாற்றுவதற்காக இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்

இதற்கமைய, நாட்டை வந்தடைந்த கப்பல் ஊழியர்கள் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளின் பின்னர், விசேட பஸ் ஒன்றினூடாக அழைத்து செல்லப்பட்டதாக மத்தளை விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த விமானம் தற்போது மத்தளை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், கப்பலில் இருந்த 57 பேரை ஏற்றிய பின்னர் இன்றிரவு மீண்டும் நெதர்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

78 பேருடன் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது

சீனாவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 44 பேர் உயிரிழப்பு…

கஞ்சா, மதுபானம் கொடுத்து சிறுமி பலாத்காரம்