உலகம்

மது விற்பனைக்கு தடை விதித்த தென்னாபிரிக்கா

(UTV|தென்னாபிரிக்கா) – தென்னாபிரிக்காவில் மது விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மது விற்பனை செய்வதை தடைசெய்யவதன் மூலம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை இந்த குறைக்க முடியும் என அந் நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனின் பற்றாக்குறை குறித்து உயர் சுகாதார அதிகாரிகள் எச்சரித்ததாக அந் நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஜூன் மாதத்தில் மது விற்பனை மற்றும் விநியோகம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, வைத்தியசாலைகள் நோயாளர்களின் அவசர சேர்க்கை மற்றும் படுக்கைகள் நிரம்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தென்னாபிரிக்காவில் இதுவரையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 276,242 ஆக அதிகரித்துள்ளதுடன், , 4,079 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பலஸ்தீனுக்கான உலக நாடுகளின் ஆதரவு: சிக்கலில் இஸ்ரேல் பிரதமர்

ரொய்ட்டர் ஊடகவியலாளர் இஸ்ரேலின் டாங்கி தாக்குதலால் கொல்லப்பட்டது உறுதி!

இலங்கையில் பிடிக்கப்படும் படகுகளை மீட்டு வருகிறோம் – ஜெய்சங்கர்.