உள்நாடு

மதுவை கொடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயரோகம் செய்த இளைஞர்கள்

(UTV | கொழும்பு) –  மதுவை கொடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயரோகம் செய்த இளைஞர்கள்இரத்தினபுரி – இறக்குவானை பகுதியில் 15 வயது சிறுமியை முச்சக்கர வண்டியில் கூட்டிச்சென்றுபாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று, பலவந்தமான முறையில் மது அருந்த வைத்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் (24 வயது ) இறக்குவானை பிரதேசத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை எனவும் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பின்னர், அவரது இரண்டு நண்பர்களும் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஏனைய இருவரை கைது செய்ய இறக்குவானை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேக நபருடன் குறித்த சிறுமி காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் தந்தை, தாய் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்ததால், அவர் அருகில் உள்ள பாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதன் பின்னர் சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து பாட்டியின் வீட்டுக்கு அருகில் கைவிட்டு, சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
பாட்டியின் வீட்டுக்கு சென்ற சிறுமி மதுபோதையில் ஆபாச வார்த்தைகளை கூறிக்கொண்டு பதற்றமாக நடந்துக்கொண்டுள்ளார்.

பாட்டி வெயிலில் காயவைப்பதற்காக மிளகாய்களை சிறுமியிடம் கொடுத்துள்ளார். அதனை காயவைக்க சென்ற போது 24 வயதான நபர் மேலும் இரண்டு பேருடன் வந்து சிறுமியை பலவந்தமாக முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு, பாழடைந்த வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

முதலில் சிறுமிக்கு பலவந்தமாக மது வழங்கிவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அவரது இரண்டு நண்பர்களும் அவளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமி இறக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனைகளை மேற்கொண்டு சிறுமியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE

எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் பயணம் செய்த எம்.பிக்கள்!

அக்குறணை தீ கட்டுப்பாட்டுக்குள் – பல கோடி ரூபா பெறுமதியான உடைமைகள் சேதம் – மாத்தளை – கண்டி வீதி மீண்டும் திறப்பு

பெப்ரவரி 15 ஆம் திகதி வரை மின்சார கட்டண திருத்தம் அமுலில் இருக்கும்