உள்நாடு

மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 8 பேர் கைது

(UTV|கொழும்பு)- ஐஸ் ரக போதைப்பொருளுடன் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதுவரித் திணைக்களத்தின் மற்றுமொரு அதிகாரி ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

நீராடச் சென்ற 2 இளைஞர்கள் பலி

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு