உள்நாடு

மதுபான கடைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  மதுபான கடைகளுக்கு பூட்டு

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு நாளையும் (13) நாளை மறுதினமும் (14) நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் ஊடாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1913 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் தயாரிப்பு தொடர்பில் தகவல் வழங்க முடியும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐக்கிய நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு

40 மே தினக்கூட்டங்கள்; பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு