கிசு கிசு

மதிய உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

(UTV|JAFFNA)-மதிய உணவுக்காக யாழில் உள்ள உணவகத்தில் வாங்கிய உணவு பொதியில் மட்டத்தேள் காணப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள உணவகத்தில் வழமை போன்று வாடிக்கையாளர் ஒருவர் இன்று மதிய உணவு பொதி ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

இந்நிலையில், உணவினை பிரித்து பார்த்த போது கறிகளுக்கு இடையே மட்டத்தேள் காணப்பட்டது. இதனால் மீளவும் உணவகத்திற்கு சென்று உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.

எனினும் குறித்த உணவக உரிமையாளர் வாடிக்கையாளரை உதாசீனம் செய்துள்ளார்.

உணவக உரிமையாளர் மீது வாடிக்கையாளர் பொதுச்சுகாதார உத்தியோகத்தரிடம் உரிய ஆதாரத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

த்ரிஷாவை திருமணம் செய்ய விரும்பும் நடிகை?

யானைச் சவாரிக்கு ருவான் முழு ஆயத்தம்

தயாசிறியை சூழ்ந்திருந்த பலருக்கு கொரோனா பரிசோதனை