உள்நாடுபிராந்தியம்

மண்சரிவு அபாயம் – 36 பேர் வெளியேற்றம்

நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரஸ்ட் பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று (30) பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதன்படி, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தற்போது ஹைபோரஸ்ட் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவினருக்குத் தேவையான சமைத்த உணவை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

விமானத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று

இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லை

இணைய வழி மூலமான கற்பித்தலில் இருந்து ஆசிரியர்கள் விலகல்