சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – நுவரெலிய, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் 24 மணத்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி பணிமனை அறிவித்துள்ளது

நுவரெலிய மாவட்டத்தில் அம்பமுவ, கொத்மலை மற்றும் நுவரெலிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட அதிகார பகுதிகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, குருவிட்ட, எஹெலியாகொட, எலபாத மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகத்தின் அதிகார பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கேகாலை மாவட்டத்தில் புளத்கோபிட்டிய, தெரணியாகல, யட்டியாந்தோட்டை மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேச செயலகங்களின் அதிகார பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் இரகசிய சந்திப்பு!

ஜனாதிபதியின் காலம்: அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியை கைது செய்வதாக அறிவிப்பு?