சூடான செய்திகள் 1

மட்டு – பொலன்னறுவை ரயில் சேவை பாதிப்பு

(UTV|COLOMBO) – மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவைக்கு இடையிலான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட “மீனகயா” என்ற புகையிரதத்துடன் யானை மோதியதன் காரணமாகவே இவ்வாறு குறித்த பகுதிகளுக்கிடையேயான ரயில்வே பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றன.

இதேவேளை, கொள்ளுபிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் வீதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடலோர ரயில் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

2018 போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 736 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

5 ரூபாவினால் சிகரட்டின் விலை அதிகரிப்பு

UPDATE-பாராளுமன்றம் கூடியது – இடைக்கால கணக்கு அறிக்கை சமர்பிப்பு