சூடான செய்திகள் 1

மட்டகளப்பு பல்கலைக்கழகம் பற்றிய பரிந்துரை அறிக்கை இன்று அமைச்சரவை குழுவுக்கு

(UTV|COLOMBO)  மனித வள மேம்பாட்டுத் துறை மேற்பார்வைக் குழுவால் கடந்த சனிக்கழமை பாராளுமன்றுக்கு முன்வைக்கப்பட்ட, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பிலான பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன அறிக்கையானது இன்று கூடவுள்ள அமைச்சரவை குழுவின் முன் முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த அறிக்கையின் பிரதியொன்று நேற்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகமானது அவசர கால தடைச்சட்டத்தின் கீழ் அரசாங்கம் பொறுப்பேற்க எந்த தடையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாகாண சபைத் தேர்தல் செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னர்

இன்றைய வானிலை…

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்