வகைப்படுத்தப்படாத

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-மோதரை பொலிஸ் பிரிவில் 227 ஜோன் பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றுக்கு திரும்பும் வழியில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 02.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மோதரை பொலிஸார் தெரிவித்தனர்.

42 வயதுடைய கதிரானவத்தை, மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக மோதரை பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மோதரை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பணிப்புறக்கணிப்பால் அஞ்சல் சேவை பாதிப்பு

President pledges not to privatise State Banks

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் பலி