அரசியல்உள்நாடு

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (30) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரச்சினையானது நீண்டகாலமாக காணப்படுவதாகவும் அவற்றை தீர்ப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனை கருத்தில் கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் உடனடியாக விசேட குழுவொன்று அமைக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் மிக நீண்ட கால மக்கள் குடியிருப்பு காணிகளை அரச காணிகளாக அண்மையில் மன்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேச காணிகளை மீண்டும் அந்தந்த மக்களுக்கான தனியார் காணிகளாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை குறித்த குழு ஊடாக மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்ததுடன் அந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜெயந்தலால் ரத்னசேகர, மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட திணைக்களத் தலைவர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள், உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

-நூருல் ஹுதா உமர் / எஸ். சினீஸ் கான்

Related posts

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை

 தனுஷ்க்க குணதிலக்க பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளது

நான் ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி – ரஞ்சன் ராமநாயக்க

editor