உள்நாடு

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து!

(UTV | கொழும்பு) –

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கனரகவாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது நேற்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்தும், கல்முனை இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த கனரக வாகனமும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தினால் பேருந்தில் இருந்த சில பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதோடு, கனரகவாகத்தில் பயணித்த சாரதி காயங்களுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்கு எதற்காக?

நாளை 12 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு

பேரூந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகள்